Connect with us

கெட் அவுட்- பாக்யராஜால் பார்த்திபன் படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா… பின்னணி என்ன?

CINEMA

கெட் அவுட்- பாக்யராஜால் பார்த்திபன் படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா… பின்னணி என்ன?

 

தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய மற்றும்  சினிமாவிலேயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைததுள்ள அவர் இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

இளையராஜா உச்சத்தில் இருந்த போது அவரிடம் எப்படி இசை வேண்டும் என இயக்குனர்கள் கேட்டு பெற முடியாது. அவர் கொடுப்பதுதான் இசை. அதில் திருத்தங்கள் சொல்ல முடியாது. ஆனால் அவர் கொடுப்பதே பெஸ்ட் ஆக இருப்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. ஆனாலும் இளையராஜாவின் இந்த பண்பால் அவரை விட்டு சில இயக்குனர்கள் பிரிந்து சென்ற சம்பவமும் நடந்துள்ளது.

   

திரைக்கதை மன்னன் எனப் பெயரெடுத்த இயக்குனர் பாக்யராஜ் இளையராஜாவோடு இணைந்து ‘இன்று போய் நாளை வா’, ‘முந்தானை முடிச்சு’,. சின்ன வீடு, தாவணிக் கனவுகள் ஆகிய படங்களில் பணிபுரிந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இளையராஜாவைப் பிரிந்து தானே இசையமைக்க ஆரம்பித்தார்.

அப்போது பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன் அறிமுகமாகும் முதல் படத்தை தானே தயாரிக்க இருந்தார் பாக்யராஜ். அந்த படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் பார்த்திபன். அதனால் இளையராஜாவை சந்தித்து படத்துக்கு இசையமைக்க வேண்டும் எனக் கேட்க சென்றுள்ளார்.

ஆனால் இளையராஜா பார்த்திபனை பார்த்ததும் ‘உன் படத்துக்கு இசையமைக்க மாட்டென் என சொல்லி ‘கெட் அவுட்’ என்று விரட்டி விட்டிருக்கிறார். அதன்பின்னர் பாக்யராஜே அந்த படத்துக்கு இசையமைக்க முடிவானது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்த படம் ஷூட்டிங் செல்லாமலே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்துதான் பார்த்திபன் புதிய பாதை திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார்.

Continue Reading
To Top