எங்க போனாலும் ஒன் படத்துக்கு இதுதான் வரப்போகுது… லன்ச் வர லேட் ஆன டைமில் கம்போஸ் செய்த பாடல்கள்… எந்த படம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

By vinoth on ஐப்பசி 18, 2024

Spread the love

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். அவரின் பயோபிக் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாக உள்ளது. அந்த படத்துக்கும் அவரே இசையமைக்க உள்ளார்.

இளையராஜா புகழின் உச்சில் இருந்த போது ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு அவர் இசையமைத்த படங்கள் பெரும்பாலும் ஹிட் படங்களாக அமைந்தன. அதிலும் ரஜினிக்கு அவர் இசையமைத்த மாஸ் மற்றும் சோகப் பாடல்கள் இன்றளவும் பேசப்படுபவைகளாக உள்ளன.

   

அதேபோல சில இயக்குனர்களின் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வந்தார் இளையராஜா. அப்படி தன்னுடைய முதல்படமான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இருந்து பெருவாரியான படங்களுக்கு இளையராஜாவையே இசையமைக்க வைத்தார் பி வாசு. அவர் படங்களில் இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் ஹிட்டாகின.

   

#image_title

 

இருவரும் இணைந்து உருவாக்கிய பாடல்களில் உச்சத்தைத் தொட்ட திரைப்படம் சின்னத்தம்பி. பிரபுவின் லைஃப்டைம் கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது சின்னத்தம்பி. இந்த படத்துக்காக மொத்தம் 13 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார் இளையராஜா. இந்த படத்துக்கான பாடல்கள் உருவான விதமே சுவாரஸ்யமானது.

ஒருநாள் இளையராஜா தன்னுடைய மதிய உணவு வர தாமதமான நிலையில் அப்போது பி வாசுவை சந்தித்துள்ளார். அப்போது வாசு “அண்ணே என் படத்துக்கு கம்போஸிங் ஆரம்பிக்கணும். எங்க போகலாம். ஆழியார் போகலாமா? வேறு எங்காவது ஹோட்டலில் ரூம் போடவா எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்ட இளையராஜா ‘எங்க போனாலும் ஒன் படத்துக்கு வர ட்யூன்தான் வரும்.

என சொல்லிவிட்டு என்ன சுச்சுவேஷன் எனக் கேட்டுள்ளார். பி வாசு பாடல்களுக்கான சூழல்களை சொல்ல அப்போதே உட்கார்ந்து 13 ட்யூன்களை போட்டுக் கொடுத்தாராம். அதை அப்படியே ரெக்கார்ட் செய்துகொண்டு பாடல் ஆசிரியர்களிடம் கொடுத்து எழுதிய பாடல்கள்தான் சின்னத்தம்பி பாடல்களாம். அப்படி உருவான பாடல்களில் ஒன்று கூட சோடை போனதில்லை என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.