பல ஆண்டுகளுக்கு முன்பே இளையராஜா பயோபிக்கை எடுக்க ஆசைப்பட்ட தமிழ் சினிமா பிரபலம்.. யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..

By vinoth on மார்ச் 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜாவே இசையமைக்கிறார். படத்தின் திரைக்கதையில் கமல்ஹாசன் பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

   

இந்த படம் பல பாகங்களாக உருவாகும் என்றும் முதல் பாகத்தில் இளையராஜா பண்ணைபுரத்தில் இருந்து சென்னை வந்து அன்னக்கிளி படத்துக்கு இசையமைப்பாளராக அறிமுகமாவது வரை மட்டுமே இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. இளையராஜாவின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணாம்சங்கள் இந்த படத்தில் காட்டப்படுமா அல்லது அவரை வழிபடும் ஒரு போற்றி போற்றி படமாக மட்டும் நின்றுவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

   

இந்த பட அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தை இயக்க அருண் மாதேஸ்வரன் சரியான நபர் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் அவரின் முந்தைய படங்கள் அனைத்தும் வன்முறையை எந்தவொரு அழகுணர்ச்சியும் இல்லாமல் காட்சி பொருளாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டவை என்பதுதான்.

 

இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்க பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் முயற்சி செய்தாராம். அதற்கான திரைக்கதை முழுவதையும் முடித்து இளையராஜாவிடம் அனுமதியும் கேட்டிருந்தாராம். ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் அப்போது நடக்கவேயில்லை.

இளையராஜா பயோபிக் மட்டும் இல்லாமல் சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கையும் எடுக்க வேண்டும் என்று அதற்காகவும் கே ராஜன் திரைக்கதை உருவாக்கி வைத்திருந்தாராம். இந்த தகவலை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.