Categories: சினிமா

‘இப்படி ஒரு படமா?’… இளையராஜா பாராட்டிய பாரதிராஜாவின் படம் அட்டர் ப்ளாப்….என்ன படம் தெரியுமா?

Spread the love

பதினாறு வயதினிலெ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் பாரதிராஜா அடுத்தடுத்து தன்னுடைய படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே வந்தார். அனைத்து பின்புலத்திலும் அவர் படம் இயக்கி இருந்தாலும் அவருடைய கிராமத்துப் படங்கள்தான் அவரின் முத்திரை.

அவர் இயக்கிய படங்கள் வரிசையாக வெற்றி பெற்ற நிலையில் நிழல்கள் மற்றும் காதல் ஓவியம் போன்ற படங்கள் மட்டும் சறுக்கின. இத்தனைக்கும் காதல் ஓவியம் படம் அற்புதமான பாடல்களைக் கொண்டிருக்கு. க்ளைமேக்ஸில் வரும் சங்கீதா ஜாதிமுல்லை பாடல் 10 நிமிடத்துக்கு மேல் ஓடும் விதமாக உருவாக்கப்பட்டு இருக்கும். அப்படி முத்து முத்தான பாடல்களை போட்டுக்கொடுத்தார் இளையராஜா.

இந்த படத்தைப் பார்த்த இளையராஜா “இப்படி ஒரு படம் நீ எடுத்திருக்காயா?” என வாய்விட்டு பாராட்டினாராம். இது அந்த படக்குழுவினருக்கே அதிர்ச்சியாக இருந்ததாம். ஏனென்றால் எப்போதுமே இளையராஜா இயக்குனர்களைப் பாராட்டவே மாட்டார். அதிலும் பாரதிராஜா தன்னுடைய நண்பர் என்பதால் அவரை அதுவரை பாராட்டியதே இல்லையாம்.

அதனால் குஷியான பாரதிராஜா மகிழ்ச்சியோடு படத்தை ரிலீஸ் செய்துள்ளார். ஆனால் படம் மிகப்பெரிய தோல்வி. இது இளையராஜா உட்பட அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் பாடல் இன்றுவரை ரசிகர்களால் ரசித்துக் கேட்கப்படுகிறது.

அதே போல ஒரு சம்பவம் முதல் மரியாதை படத்தின் போதும் நடந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் பின்னணி இசைக்கோர்ப்புக்காக தனது நண்பரும் ஆஸ்தான இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு போட்டுக்காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த இளையராஜாவுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதைப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பாரதிராஜாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டாராம்.

ஆனால் அந்த படம் மிகப்பெரிய ஹிட். அன்று முதல் பாரதிராஜா ‘இளையராஜா படம் ஓடும் என்று சொன்னால் ஓடாது. ஓடாது என்று சொன்னால் ஓடும்’ என விளையாட்டாகக் கலாய்க்க ஆரம்பித்தாராம்.

vinoth

Recent Posts

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

2 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

6 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

9 minutes ago

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

22 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

29 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

34 minutes ago