Connect with us

கங்கை அமரன் இசையமைப்பாளரான போது அவரைத் திட்டி வெளியே போக சொன்ன இளையராஜா.. ஏன் தெரியுமா.?

CINEMA

கங்கை அமரன் இசையமைப்பாளரான போது அவரைத் திட்டி வெளியே போக சொன்ன இளையராஜா.. ஏன் தெரியுமா.?

 

தமிழ் சினிமாவில் பாவலர் பிரதர்ஸாக நுழைந்து தங்கள் தனித்துவத்தோடு கலக்கியவர்கள் இளையராஜா சகோதரர்கள். இளையராஜா தன்னுடைய இசையால் 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தார். இப்போது 50 ஆண்டுகளை அவரின் திரையுலகப் பயணம் நெருங்கிக் கொண்டிருக்கும் போதும் அவர் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

அவரின் தம்பியான கங்கை அமரன் பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, பின்னர் இசையமைப்பாளராக மாறி பின்னர் இயகுனர் ஆனார். தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும் அவர் வெற்றிகளை சுவைத்தார். அவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஆல்டைம் கமர்ஷியல் வெற்றிப் படமாக உள்ளது. அவர் எழுதிய ஆயிரக் கணக்கான பாடல்கள் கிளாசிக்காக அமைந்துள்ளன.

   

இந்நிலையில் தான் முதல் முதலாக இசையமைப்பாளராக ஒரு படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆனபோது அதையறிந்து இளையராஜா அவரை தன்னுடைய ரெக்கார்டிங்கில் இருந்து வெளியேற சொல்லியுள்ளார். அவரிடம் “உனக்கு இசையைப் பத்தி என்ன தெரியும். இனிமே என் பாட்டுல நீ கிட்டார் வாசிக்கக் கூடாது.. வெளியே போ” எனத் திட்டியனுப்பியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கங்கை அமரன் அழுதுகொண்டே வெளியே சென்றுள்ளார். அப்போது இளையராஜாவின் குருவான ஜி கே வெங்கடேஷ் கங்கை அமரனைப் பார்த்து என்ன விஷயம் எனக் கேட்டுள்ளார். நடந்ததை அழுதுகொண்டே சொல்லியுள்ளார் கங்கை அமரன. அவரை சமாதானப்படுத்தி இளையராஜாவிடம் அழைத்து சென்றுள்ளார்.

இளையராஜாவிடம் “ஏண்டா அவன் ம்யூசிக் பண்ணக் கூடாது. அவன் பண்ணலன்னா வேற யாரோ பண்ணப் போறாங்க. நீ என்கிட்ட இருந்து வந்து இப்போ ம்யூசிக் பண்ணலயா.. அவன் என்ன உனக்கு போட்டியா” எனக் கடுமையாக பேசி இளையராஜாவை கண்டித்துள்ளார். அதன் பிறகே இளையராஜா, கங்கை அமரனை ஏற்றுக்கொண்டாராம். இந்த சம்பவத்தை கங்கை அமரன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளராக 1979 ஆம் ஆண்டு அறிமுகமான கங்கை அமரன் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top