NDA கூட்டணியில் தொடர்வதாக ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் உறுதி செய்தார். சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், குறைந்தபட்சம் 5 தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறினார். குறிப்பாக லால்குடி, குன்னம், திருவாடனை, கள்ளக்குறிச்சி மற்றும் சென்னையில் ஒரு தொகுதியில் மட்டும் களமிறங்க உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக தவெக கூட்டணியில் IJK இணைய உள்ளதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
