3 முறை மிஸ் ஆச்சு…. ஆனா இந்த முறை மிஸ் ஆகாது… தளபதி 70 படத்தில் இயக்குனர் சங்கர்… அதுவும் இப்படி ஒரு கதையா…??

By Nanthini on ஆடி 25, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் பின்னணி வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இந்தத் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

   

இந்நிலையில் தளபதி எழுபது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு பக்கம் விஜய் அரசியலில் இறங்க இருப்பதால் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு அதன் பிறகு சினிமாவில் நடிப்பார் என்று கூறப்பட்டாலும் தற்போது தளபதி 70வது படத்தின் இயக்குனர் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே விஜய் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

 

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் இவர்கள் ஒரு முறை கூட எந்த ஒரு திரைப்படத்திலும் இணையவில்லை. ஆனால் விஜய்யிடம் மூன்று முறை சங்கர் கதை கூறியுள்ளார். அதாவது 2014 ஆம் ஆண்டு மல்டி ஸ்டார் ஸ்கிரிப்ட் தயார் செய்து விஜய் ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாகவும் நடிப்பதாக இருந்தது. அடுத்ததாக 2017 ஆம் ஆண்டு முதல்வன் இரண்டாம் பாகத்தை விஜய் வைத்து எடுக்க சங்கர் திட்டமிட்டுள்ளார். இறுதியாக 2018 ஆம் ஆண்டு 3டி அனிமேஷனில் சயின்ஸ் கிச்சன் கதை விஜய்யிடம் கூறிய நிலையில் இவை அனைத்துமே விஜய் பெரிய அளவில் கவரவில்லை.

தற்போது அரசியல் திரில்லர் கதை ஒன்றை விஜய் இடம் சங்கர் கூறியுள்ளதாகவும் அதுவும் விஜய் தற்போது அரசியலில் களமிறங்க இருப்பதால் அந்த கதை அவரை ஈர்த்துள்ள நிலையில் தளபதி எழுபதாவது படம் சங்கர் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. எனவே விரைவில் தளபதி எழுவது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மூன்று தடவை மிஸ் ஆனாலும் தளபதி 70 எனக்கு தான் என்று சங்கர் டார்கெட் செய்துள்ளார்.