நீரிழிவு நோயாளிகளுக்கு குட் நியூஸ்…! “இனி செலவு ரொம்ப கம்மி” சென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 7, 2025

Spread the love

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்திய நீரிழிவு நோய் ஆய்வின்படி 10.1 கோடி பேருக்கு நீரழிவு நோய் இருப்பதாக 2023 ஆம் வருடம் வெளியான தரவுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .இவ்வாறு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது ரத்தத்தில் குளுக்கோஸை கண்காணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதற்காக விலை அதிகமான சுய பரிசோதனை குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தையும் பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது. இந்த சாதனத்தை ஐஐடி பேராசிரியர் பரசுராம் சுவாமிநாதன் தலைமையில் ஆன மின்னணு பொருட்கள் மெல்லியப்படல ஆய்வகத்தைச் சேர்ந்த சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். இந்த சாதனம் நீண்ட காலத்திற்கு பயன்படுத்துதல், துல்லியமான அளவை காண்பித்தல், நம்பகத் தகுந்த தரவுகள் ஆகிய குறைந்த செலவில்  உருவாக்கப்பட்டுள்ளது.