உலகக்கோப்பை கால்பந்து போட்டி வருகின்ற 2030 ஆம் ஆண்டு ஸ்பெயின், போர்ச்சுக்கல், மொராக்கோ ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தங்கள் நாட்டில் உள்ள 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் நடவடிக்கையில் மொராக்கோ நாடு களமிறங்கி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படும் கொடிய ரசாயனமான ஸ்டிரைக்ணைன் நாய்களுக்கு விஷம் கொடுத்தும், சுட்டும் அல்லது பிடிக்கப்பட்டு இறைச்சிக்கூடங்களுக்கு அனுப்பி கொள்ளப்பட உள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 30 லட்சம் நாய்கள் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முயற்சிக்கு சர்வதேச விலங்குகள் நல அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே அவர்களுடன் பழகி இணைந்த முதல் விலங்கினம் நாய்கள் தான். ஆதி மனிதன் நாயை வேட்டையாட பயன்படுத்தினான். வேட்டையாடிய நாய்கள் அந்த இறையை தாங்கள் தின்னாது, தங்களை வளர்க்கும் எஜமானர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும். இரையில் பெரும்பாலான சதைப்பகுதி எல்லாம் மனிதன் தின்றுவிட்டு நாய்க்கு எலும்பை போட்டு வளர்த்தான். இன்று உலகம் பெருமளவில் மாறினாலும் மனிதனின் சுயநலம் என்பது மாறவில்லை. மொராக்கோவில் 30 லட்சம் தெரு நாய்களை கொல்லா நாட்டு அரசு முடிவு செய்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதற்காக மொராக்கோ நாடு வெளியிட்டு அறிக்கையில், தங்கள் நாட்டு நகரங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல பரிசீலித்து வருகிறது. 2030 FIFA உலக கோப்பையை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலுடன் இணைந்து நடத்த உள்ளது மொராக்கோ. இந்த மூன்று நாடுகளிலும் போட்டிகள் நடைபெறும் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாகவே மொராக்கோ தனது நகரங்களை கவர்ச்சிகரமானதாக மாற்ற முயற்சிக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 30 லட்சம் தெருநாய்களைக் கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. மொராக்கோவின் இந்த மனிதாபிமானமற்ற முடிவுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
