ஓய்வு காலத்தில் கோடீஸ்வரராக வாழ வேண்டுமா…? இப்படி திட்டமிட்டு SIP- இல் முதலீடு செய்யுங்க…

By Meena on பிப்ரவரி 10, 2025

Spread the love

ஓய்வு காலத்துக்கு பிறகு யாரையும் சார்ந்திருக்காமல் தனியாக தன்னுடைய சொந்த சேமிப்பில் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி ஓய்வு காலத்தில் நல்ல ஒரு சேமிப்பு உடன் வாழ வேண்டும் என்றால் முறையான திட்டமிடலை இளமை காலத்தில் இருந்து ஆரம்பித்து விட வேண்டும். அப்படி இந்த SIP முதலீட்டில் நீங்கள் திட்டமிட்டு முதலீடு செய்யும்போது ஓய்வு காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாம். அதைப் பற்றி இனி பார்ப்போம்.

   

உங்களது மொத்த வருமானத்திலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் அல்லது SIP முதலீட்டில் ஒரு 20 சதவீத தொகையை தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக முதலீடு செய்யும் போது உங்களுக்கு ஒரு நிலையான கார்பஸ் கிடைக்கும். ஆரம்பத்திலேயே முதலீட்டை ஆரம்பித்து அதிக ஆண்டுகள் முதலீடு செய்யும்போது உங்களுக்கு நிச்சயம் நல்லதொரு நீங்கள் எதிர்பார்க்காத அளவு ஒரு சேமிப்பான வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.

   

இப்போது ஒருவர் மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரம் முதலீடு செய்து அதில் 12 சதவீத வருடாந்திர வருமானத்தை பெற்றால் அவர்களின் கார்பஸ் 25, 30 மற்றும் 35 ஆண்டுகளில் மிகப்பெரிய ஒரு சேமிப்பாக மாறும். அதாவது மாதம் தோறும் ரூபாய் 10 ஆயிரம் முதலீடு செய்யும்போது 25 ஆண்டுகளில் உங்களது மொத்த முதலீடு 30 லட்சம் ஆக இருக்கும். இதில் மூலதன ஆதாயங்கள் ரூ 1,59,76, 351 ஆகவும் மதிப்பிடப்பட்ட கார்ப்பஸ் ரூபாய் 1, 89, 76, 351 ஆகவும் இருக்கும்.

 

அதே முதலீட்டை நீங்கள் 30 ஆண்டுகள் செய்யும்போது மொத்த முதலீடு ரூபாய் 36 லட்சமாக இருக்கும். மதிப்பிடப்பட்ட ஆதாயங்கள் ரூ, 3, 16, 99, 138 ஆகவும் மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூபாய் 3, 52, 99,138 ஆகவும் இருக்கும். அதே 35 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களது மொத்த முதலீடு 42 லட்சமாகவும் மூலதன ஆதாயங்கள் ரூ 6, 7,52,691 ஆகவும் மதிப்பிடப்பட்ட கார்ப்பஸ் ரூபாய் 6,49, 52,691 ஆகவும் இருக்கும்.

இதில் நீங்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளை கூட்டும் போது அதற்கான பலன் உங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவு கிடைக்கும். உங்களால் மாதம்தோறும் ரூபாய் 10,000 சேமிக்க முடியும் என்றால் இந்த SIP திட்டத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் முதலீடு செய்து வரும் போது உங்களால் ஓய்வு காலத்தில் கோடீஸ்வரராக யாரையும் எதிர்பார்க்காமல் வாழ முடியும்.