தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், கட்சித் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்ற அதிரடி உறுதிமொழியைச் சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் வழங்கியுள்ளார். “உங்களை யாராவது மிரட்டினாலோ அல்லது உங்கள் மீது கை வைத்தாலோ, அடுத்த 15 நிமிடங்களில் 2000 கழகத்தினர் உங்கள் முன்னே வந்து நிற்பார்கள்” என்று அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எதைப் பற்றியும் அச்சப்படாமல் களப்பணியாற்றுமாறு தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்த அவர், திமுகவின் கோட்டை எனக் கருதப்படும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தவெக மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் சூளுரைத்தார். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என்றும், அதில் 170 முதல் 180 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் கட்சியின் தலைவர் விஜய் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டியது தொண்டர்களின் கடமை என்று அவர் வலியுறுத்தினார். வேலூரில் விஜய் வெளியிட்ட வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதே இக்கூட்டத்தின் முக்கிய செய்தியாக அமைந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…