Icecream அதிகம் விரும்பி உண்பவரா நீங்கள்…? உங்களுக்கு இந்த நோய் வரலாம்… என்னனு தெரிஞ்சுக்கோங்க…

By admin on மாசி 2, 2025

Spread the love

Icecream என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது Icecream தான். திரும்பிய பக்கமெல்லாம் ஐஸ்கிரீம் கடைகள் இருக்கிறது. கடற்கரை, பூங்கா, சினிமா என எங்கு சென்றாலும் ஐஸ்கிரீம்கள் ஆக்கிரமித்து இருக்கிறது. ஆனால் இந்த Icecream ஒரு சத்தான உணவு கிடையாது. ஐஸ்கிரீம் ஆல் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம்.

   

Icecream கள் அதிகம் சாப்பிடும்போது முக்கியமாக மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கும் என்று தற்போதைய ஆய்வு முடிவுகள் கூறுகிறது. Icecream -இல் இருக்கும் கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவை எகிற வைத்து இதய நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதில் இனிப்பு அதிகமாக இருப்பதால் உடல் பருமன் மற்றும் நீரழிவு நோய் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

   

 

இந்த ஐஸ்கிரீமை வழக்கமாக விரும்பி அதிகம் உண்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்க செய்யும். இதனால் அவர்கள் நீரிழிவு நோய்க்கு ஆளாகிறார்கள். இது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை பெரிதளவு குறைக்கும் தன்மை ஐஸ்கிரீமுக்கு இருக்கிறது. அதனால் நீங்கள் Icecream விரும்பி சாப்பிடுவராக இருந்தால் இது எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை தவிர்க்க பாருங்கள். அப்படியே சாப்பிட்டாலும் எப்போதாவது ஒருமுறை மட்டும் ஆசைக்கு சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.