வேலை செய்ய சோம்பேறிதனமா இருக்கா….? உங்களை சுறுசுறுப்பாக மாற்ற எளிய வழிமுறைகள் இதோ…

Spread the love

எல்லா நாட்களும் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சில நாட்கள் நாம் சந்தோஷமாக இருக்கலாம். ஒரு சில நாட்கள் நம் மனநிலை சரியில்லாமல் இருக்கும். ஒரு சில நாட்கள் ஏண்டா இன்றைய பொழுது நாம் எந்திரிக்க வேண்டும் என்று தோன்றும். அதேபோல் தான் நாம் செய்யும் வேலை ஒருநாள் சுறுசுறுப்பாக இருக்கும் ஒருநாள் சோம்பேறித்தனமாக லீவ் போட்டு இருந்து விடலாமா என்று தோன்றும். அப்படி நீங்கள் மிகவும் சோம்பேறித்தனமாக உணர்ந்தால் உங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள ஒரு சில வழிமுறைகளை பின்பற்றலாம். அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

நீங்கள் காலையில் எழும்புவதற்கு உங்களுக்கு சோம்பேறித்தனமாக இருக்கிறது என்றால் முந்தைய நாள் இரவே மறுநாள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று திட்டமிட்டு கொள்ளுங்கள். அடுத்ததாக காலையில் எழுந்த உடனே ஒரு Routine வைத்துக்கொள்ளலாம். தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வது, ஒரு பத்து நிமிடங்கள் நடப்பது என ஒரு ரொட்டீனை வைத்து பின்பற்றுங்கள்.

அடுத்ததாக எதெல்லாம் மிகவும் முக்கியமாக செய்யக்கூடிய வேலை எது நிதானமாக செய்யக்கூடிய வேலை என்பதை நீங்களே பிரித்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடத்தில் இருக்கக்கூடிய ஒரு வேலை இருந்தால் அதை யோசிக்காமல் சட்டென்று முடித்து விடுங்கள். அன்றைய தினம் நீங்கள் சோம்பேறித்தனமாக உணர்ந்தால் அன்றைக்கு உங்களை சுறுசுறுப்பாக்கி கொள்ள ஒரு 5, 10 நிமிடம் உங்களுக்கு என்று ஒரு ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அன்றைய தினம் வேலையை முடிக்க வேண்டும் என்பதை டார்கெட் ஃபிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் வேலைக்கு செல்லும்போது சோம்பேறிதனமாக உணர்ந்தால் நீங்கள் வேலை செய்யும் இடம் அல்லது தினமும் நீங்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் இடத்தை மிகவும் சுத்தமாக வைத்திருக்க பழகுங்கள். ஏனென்றால் மிகவும் அசுத்தமாக கலைந்த பொருட்களோடு இருக்கக்கூடிய இடத்தை பார்த்தாலே நமக்கு வேலை செய்யவே தோணாது. சுத்தமான இடத்தை பார்க்கும் போது நாம் வேலை செய்யலாம் என்று நமக்கு தோன்றும். அதேபோல் உங்கள் உடம்பை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஒரே இடத்தில் அமர்ந்து இருக்காமல் அடிக்கடி எழுந்து நடப்பது கை கால்களை நீட்டி மடக்குவது இல்லை ஏதாவது பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்வது போன்றவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.

அதேபோல் நீங்கள் ஒரு வேலை செய்து முடித்தால் உங்களுக்கு நீங்களே ஒரு பாராட்டை வைத்துக் கொள்ளலாம். ஏதாவது உங்களுக்கு பிடித்தவைகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் இல்லை விரும்பியதை வாங்கி சாப்பிடலாம் இந்த மாதிரி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் மனதில் கொள்ளுங்கள் என்னதான் சோம்பேறித்தனமாக இருந்தாலும் நீங்கள் செய்யக்கூடிய வேலையை நீங்கள்தான் முடித்தாக வேண்டும் அதனால் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கு என்னெல்லாம் உங்களுக்கு உதவுகிறதோ உங்கள் மனநிலைக்கு எது தோன்றுகிறதோ அதை செய்தால் சோம்பேறித்தனத்தை விரட்டி விடலாம்.

admin

Recent Posts

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

9 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

27 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

32 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

36 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

53 minutes ago