உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனைகள் தான். வெளியில் மக்கள் ஷாப்பிங் செல்லும் போது கையில் பணம் எடுத்துச் செல்வதில்லை. போனை தான் எடுத்து செல்கிறார்கள். ஏனென்றால் google pay phone pay paytm போன்றவற்றின் மூலம் ஸ்கேன் செய்து ஷாப்பிங் செய்யும் பொருட்களுக்கான பில்லை செலுத்தி விடுகிறார்கள். இந்த UPI பரிவர்த்தனை என்பது நம்முடைய குறிப்பிட்ட வங்கியில் இருக்கும் பணத்தை எடுத்து நாம் யாருக்கு செலுத்துகிறோமோ அவரது வங்கியில் கொண்டு சேர்ப்பது தான் இந்த UPI பரிவர்த்தனை.

ஆனால் ஒரு சில நேரத்தில் நம்முடைய UPI வேலை செய்யாவிட்டாலோ அல்லது நம் வங்கி சர்வர் பிஸியாகவோ அல்லது பிரச்சினையில் இருந்தாலும் நம்மால் பணம் செலுத்த முடியாமல் போகலாம். இந்த மாதிரி டிஜிட்டல் பேமென்ட் செய்யும்போது பிரச்சனைகளை சமாளிக்க தான் புதிதாக UPI Lite என்ற ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. இது என்ன இது எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி இனி காண்போம்.
இந்த UPI Lite ஆனது google pay அறிமுகப்படுத்திய வாலெட் போன்ற ஒரு அம்சம் ஆகும். நீங்கள் வழக்கமாக ஷாப்பிங் செய்யும் பணத்தை உங்கள் வங்கியில் இருந்து எடுத்து இந்த UPI Lite இல் ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வங்கி சர்வர் வேலை செய்யாவிட்டாலும் எளிதாக உங்களால் UPI லைட்டிலிருந்து பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

இந்த UPI Lite இல் அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம். ஒரு தடவைக்கு ரூ 2000 என ஒரு நாளைக்கு ரூ 4000 வரை உபயோகம் செய்து கொள்ள முடியும். மேலும் இதில் 500 ரூபாய்க்கும் குறைவான பரிவர்த்தனைக்கு பாஸ்வேர்ட் பின் தர தேவையில்லை. அதேபோல் பணப்பரிமாற்றத்திற்கு எந்த வித கட்டணமும் இல்லை என்பது குறிப்பிட தகுந்த விஷயம். UPI Lite நமது வங்கியில் இருந்து பணத்தை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளும். அதை மீண்டும் வங்கி கணக்கிற்கு மாற்ற இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
