மாதுளை ஜூஸ் குடிச்சா ஏவுகணை கரெக்டா போய் விழுமா?… ஈரானின் நக்கல் பதிவால் இணையமே அதிருது… ‘ஸ்கேட்போர்டு’ வீடியோவின் பின்னணி என்ன?…!!!

By Rajeshwari on பங்குனி 28, 2026

Spread the love

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் இஸ்ரேலை கிண்டல் செய்யும் வகையில் ஒரு வினோதமான வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஈரானிய வீரர் ஒருவர் கையில் மாதுளை ஜூஸ் பாட்டிலுடன் ஸ்கேட்போர்டில் நின்றபடி செல்வதும், பின்னணியில் ஏவுகணைகள் பாய்வதும் காட்டப்பட்டுள்ளது.

மேலும் “டெல் அவிவ் நகரை இன்னும் துல்லியமாகத் தாக்க மாதுளை ஜூஸ் குடியுங்கள்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் உடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதை மறுக்கும் விதமாகவும் ஈரான் சில நையாண்டிப் பதிவுகளை வெளியிட்டிருந்தது.

   

“>

   

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகியுள்ள இந்த மாதுளை ஜூஸ் வீடியோ, இஸ்ரேலின் பாதுகாப்புத் திறனை எள்ளி நகையாடும் ஒரு உளவியல் போராகவே பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இத்தகைய சமூக வலைதளப் பதிவுகள் மத்திய கிழக்கு