நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருவேன்… சீமான் அதிரடி அறிவிப்பு…!!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

அரசு வழங்கும் இலவசத் திட்டங்களைக் கிண்டல் செய்யும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ள கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் இலவசப் பொருட்களை வாரி வழங்குவதை விமர்சித்த அவர், “திமுக, அதிமுக போன்ற கட்சிகள் இலவசத் தொலைக்காட்சி, மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் அரிசி எனப் பலவற்றை ஏற்கனவே கொடுத்துவிட்டன; தம்பி ஒருவரும் (விஜய்) கார், பைக் என வாக்குறுதி அளிக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

இந்த இலவசப் போட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “நானும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தரப்போகிறேன்” என்று நகைச்சுவையாகக் கூறினார். தமிழ்நாட்டில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதால், மக்கள் சாலைகளில் அவதிப்படுவதற்குப் பதிலாக ஹெலிகாப்டரில் பறந்து செல்லலாம் என்ற உள்நோக்கத்துடன் அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார். இலவசங்களை நம்பி வாக்களிக்கும் அரசியலைச் சாடும் வகையிலேயே சீமான் இவ்வாறு பேசியுள்ளார்.