அங்க மட்டும் கை வச்சா…. தவெக கதை முடிந்தது….  CPM சண்முகம் எச்சரிக்கை… அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

ரேஷன் அரிசி குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், “ஏழைகளின் பசியைப் போக்கும் ரேஷன் அரிசியில் கை வைத்தால் தவெகவின் அரசியல் கதை முடிந்துவிடும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சண்முகம் கடுமையாக எச்சரித்துள்ளார்.

கட்சி கூட்டத்தில் பேசிய அவர், ரேஷன் அரிசி ஆடு, மாடுகளுக்கு உணவாக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக தவெக தரப்பில் கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அது முற்றிலும் தவறானது என்றும், இன்னமும் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் பசியையும் காக்கும் மிக முக்கியக் கேடயமாக ரேஷன் அரிசியே விளங்குகிறது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனவே, சாமானிய மக்களின் உணவு உரிமையோடும் வயிற்றுப் பசியோடும் விளையாடுவதை விடுத்து, எதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு தவெகவினர் மிக கவனத்துடன் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.