அதிமுகவை ‘தூர்ந்து போன சக்தி’ என்று விமர்சித்துப் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அன்றே தவெகவின் அரசியல் ஆட்டம் அடங்கி, அதன் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றும், அதற்காக ஸ்டாலினுக்குக் கோபம் வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மதயானைக்கு நிகராகக் கருதப்படும் திமுகவையே தங்கள் ஆட்சிக்காலத்தில் அடக்கி ஆண்ட பாரம்பரியம் கொண்டவர்கள் அதிமுகவினர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களை வீழ்ந்து போன சக்தியாக எடைபோட வேண்டாம் என எச்சரித்தார். அத்துடன், தற்போது தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்திருப்பது போல் கற்பனையில் மிதந்து பேசாமல், விஜய் தனது எதார்த்த நிலையை உணர்ந்து பேச வேண்டும் என்றும் ராஜேந்திர பாலாஜி சாடியுள்ளார்.
