லஞ்ச ஊழல் இனி இல்லை… போன் கையில் இருந்தால் போதும்… அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு…!

By Visaka on ஆடி 15, 2026

Spread the love

தமிழக அரசுத் துறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக அதிரடியான புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக 9498180936 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாக தங்களின் புகார்களை ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகளைக் கட்டாயமாக அமைக்க வேண்டும் என்று அந்தந்த துறைத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மட்டுமின்றி, dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 044-22321090, 22321085, 22310989 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டோ பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தைரியமாகப் பதிவு செய்யலாம் என்றும், லஞ்சமில்லா நிர்வாகத்தை உருவாக்க இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.