விஜயகாந்த்- ராதிகா காதலைப் பிரித்ததே அவர்தான்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த பலரும் அறியாத தகவல்!

By vinoth on மே 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார்.

   

விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள். ஆனால் அவரோடு துணிச்சலாக நடித்தவர் ராதிகாதான். அவரோடு பல படங்களில் ஜோடியாக நடித்த அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அந்த காதல் அவர்களின் திருமணம் வரை கூட சென்றது. ஆனால் திடீரென்று அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

   

அதன் பிறகு விஜயகாந்த் பிரேமலதாவை மணந்தார். இந்நிலையில் விஜயகாந்த் ராதிகா ஆகியோரின் காதலைப் பிரித்ததே விஜய்காந்தின் நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர்தான் என்று சினிமா தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்தும் ராவுத்தரும் பிரிவதற்குக் காரணமே பிரேமலதாதான் என்றும் சொல்லப்பட்டது.

 

இது சம்மந்தமாக அவர் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் “விஜயகாந்த் ராதிகா காதலை பிரித்ததே இப்ராஹிம் ராவுத்தர்தான். அது நல்லதா கெட்டதா என்பது இப்ராஹிம் ராவுத்தருக்கும், விஜயகாந்துக்கும்தான் தெரியும்” எனக் கூறியுள்ளார். இப்ராஹிம் ராவுத்தருக்கு ஜோதிடத்தின் மேல் இருந்த நம்பிக்கையால், இவர்கள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதாக ஒரு கிசுகிசு தமிழ் சினிமா உலகில் பிரபலம். இப்போது அதே காரணத்தை மாணிக்கம் நாராயணனும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.