“என் முன்னாடி வரச்சொல்லுங்க.. கன்னத்துலயே அடிப்பேன்”… அரசு ஊழியரை மிரட்டிய அமைச்சர்… காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு…!

By Nanthini on ஆனி 8, 2026

Spread the love

அரசு ஊழியரை கன்னத்திலேயே அடிப்பேன் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியிருப்பது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் நேற்றிரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சென்ற அமைச்சர், அங்கு மின்தடை ஏற்பட்டிருந்ததால் உடனே மின்துறை உயரதிகாரியைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அப்போது, குறிப்பிட்ட ஊழியர் ஒருவர் சரிவர வேலை செய்யவில்லை என்று அந்த அதிகாரி பதிலளிக்க, அதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் “அவனை என் முன்னாடி வரச்சொல்லுங்க, கன்னத்துலயே அடிப்பேன்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். மக்கள் மத்தியில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர், அரசு ஊழியரை பகிரங்கமாகத் தாக்குவது போல் பேசிய இந்த ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே தற்பொழுது கடும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.