“நானும் 1000 கோடி செலவு பண்ணேன்னு ஸ்டாலின் மேல AI வீடியோ வெளியிடவா?”… கொதித்த ஆதவ் அர்ஜுனா…. திமுகவின் மெகா சதி அம்பலம்….!

By Nanthini on ஐப்பசி 7, 2026

Spread the love

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகினார். தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கட்சி மாறிய அவர், தற்போது வரவிருக்கும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். கட்சி தாவி மீண்டும் போட்டியிடும் அவருக்குத் தொகுதியில் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படும் சூழலில், இந்தத் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், சத்யபாமா தவெகவில் இணைந்தது குறித்து வேதனையுடன் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலானது. அதில், கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவழித்ததாகவும், இந்த முறை அமைச்சர்கள் தங்குவதற்காக ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் அவர் பேசுவது போலக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் திமுக சார்பில் எம்.எல்.ஏ ஆஸ்டின் இன்று அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

   

இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்கள் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், பரவி வரும் வீடியோ முற்றிலும் போலியானது எனக் கூறித் தள்ளினார். “எல்லாம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. நானும் நாளை காலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சார் 1000 கோடி செலவு பண்ணாருனு ஒரு ஏஐ வீடியோ போடுவேன்.. பார்க்குறீங்களா?” என்று காட்டமாகப் பதிலளித்தார்.

   

மேலும், வாக்குப்பதிவு நெருங்கும் நேரத்தில் மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தவே திமுக இத்தகைய சதியில் ஈடுபட்டுள்ளதாக ஆதவ் அர்ஜுனா கடுமையாகக் சாடியுள்ளார். தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பரவி வரும் இந்த ஏஐ வீடியோ விவகாரமும் அதைத் தொடர்ந்து எழுந்துள்ள புகார்களும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.