திமுகவுடன் இணைய மாட்டேன்…. சற்றுமுன் முடிவை தெரிவித்தார்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on பங்குனி 22, 2026

Spread the love

பாமக மற்றும் அதிமுக (சசிகலா அணி) இடையிலான கூட்டணி அறிவிப்பு அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாமகவின் முக்கிய நிர்வாகியான அருள் இது குறித்துத் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். இந்தக் கூட்டணி முடிவில் தனக்கோ அல்லது ஜி.கே.மணிக்கோ உடன்பாடு இல்லை என்றும், கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகளும் இதையே கருதுவதாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் திமுகவில் இணையப்போவதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அருள், கொள்கை ரீதியான அதிருப்தி இருந்தாலும் மாற்றுக்கட்சிக்குச் செல்லும் எண்ணம் தமக்குக் கிடையாது என்றும், தனது அரசியல் பயணம் இறுதிவரை மருத்துவர் ராமதாஸ் அவர்களுடனேயே தொடரும் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.