நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற ஊகங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, த்ரிஷா அவருடன் நெருக்கம் காட்டி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் போது அவர் விஜய் வீட்டிற்குச் சென்று நீண்ட நேரம் உரையாடியது முதல், விஜய்யின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் த்ரிஷாவின் பெயரும் அவரது இருப்பும் அடிபடுவது வரை அனைத்தும் இணையத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷா பேசிய பழைய நேர்காணல் வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. 2004-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், “எனக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது; இன்னும் 10 ஆண்டுகளில் பாருங்கள்” என்று த்ரிஷா மிகவும் தன்னம்பிக்கையுடன், அதே சமயம் புன்னகையோடு கூறியுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு அவர் விளையாட்டாகச் சொன்ன அந்த வார்த்தைகள், தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.
சினிமாவில் 22 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா, பல இளம் நடிகைகளுக்கு சவாலாக விளங்குகிறார். தற்போது விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், த்ரிஷாவின் இந்த பழைய வீடியோவும், சமீபகாலமாக அவர் காட்டி வரும் அரசியல் ஈடுபாடும் வெறும் தற்செயலான நிகழ்வா அல்லது நிஜமாகவே அவர் ‘மௌனமான’ ஒரு அரசியல் நகர்வை மேற்கொள்கிறாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். த்ரிஷாவின் இந்த பழைய பேச்சு, அவரது எதிர்கால அரசியல் கனவின் விதையாக இருக்குமோ என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…