தமிழ் தெலுங்கு கன்னடம் என 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை ரோஜா. 1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டதன் மூலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். சமீபத்தில் படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து இவருடைய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜயுடன் நெஞ்சினிலே படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். அப்போது விஜய் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். யாரிடமும் அதிகம் பேச மாட்டார்.
சில வருடம் கழித்து அவருடைய நடிப்பில் காவலன் படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பில் என்னை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் “மேடம் நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா? படக் குழுவில் சொன்னபோது அவர்கள் சும்மா சொல்கிறார்கள் என்று நினைத்தேன். நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது .நாங்கள் இன்னும் உங்களை ஹீரோயினாகவே பார்த்து வருகிறோம் என்று கூறினார். அதனால்தான் தமிழ் சினிமாவில் அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கினேன் என்று கூறியுள்ளார்.
