CINEMA
அவர்கிட்ட பேசுறதும் ஒரு புத்தகம் படிக்கிறதும் ஒன்னு… அவரை ரொம்ப மிஸ் பண்றேன்… Feel பண்ணிய சத்யராஜ்…
சத்யராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், குணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர் ஆவார். இவர் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதில் இருந்தே நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தவர். எம்ஜிஆர் மற்றும் நடிகர் ராஜேஷ் கண்ணாவின் தீவிர ரசிகராக இருந்தவர் சத்யராஜ். அவரது தாயார் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று கூறி தடை விதித்தார். அதையும் எதிர்த்து 1976 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் இருந்து சென்னை கோடம்பாக்கத்திற்கு குடி பெயர்ந்தார் சத்யராஜ்.
சென்னைக்கு குடி பெயர்ந்த பின்பு நடிகர் சிவகுமார் மற்றும் தயாரிப்பாளர் திருப்பூர் மணியன் ஆகியோரை சந்தித்து தனது ஆர்வத்தினை வெளிப்படுத்தினார் சத்யராஜ். பின்னர் கோமல் சுவாமிநாதன் அவர்களின் நாடக குழுவில் சேர்ந்தார் சத்யராஜ். 1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சத்யராஜ். அந்த படத்தில் அவர் முக்கிய வில்லன் பத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு கண்ணன் ஒரு கைக்குழந்தையின் திரைப்படத்திற்கு தயாரிப்பு மேலாளராக பணியாற்றினார் சத்யராஜ்.
1985 ஆம் ஆண்டு சாவி என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகனாக நடித்தார் சத்யராஜ். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. ஆரம்பத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்ததற்கு பின்னரே நடிகராக நடிக்க ஆரம்பித்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ்.
சத்யராஜின் கல்லூரி கால நண்பர்தான் இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன். இவர் 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக சத்யராஜை வைத்து இயக்கினார். 1984 முதல் 2013 வரை சுமார் 25 படங்களுக்கு மேலாக இயக்குனர் மணிவண்ணன் சத்யராஜை வைத்து இயக்கினார். அவற்றில் 18 படங்களில் சத்யராஜ் நாயகனாக நடித்தார். சத்யராஜுக்கும் மணிவண்ணன் அவர்களுக்கும் இடையே ஒரு ஆழமான நட்பு இருந்தது. அதைப்பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார் சத்யராஜ்.
அவர் கூறியது என்னவென்றால், மணிவண்ணன் ரொம்ப திறமையானவர் மற்றும் அறிவுபூர்வமானவர். அவரிடம் பேசினால் நேரம் போவதே தெரியாது. அவரிடம் பேசுவதும் ஒரு புத்தகத்தை படிப்பதும் ஒன்றுதான். இப்போ அவர் இல்லை. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்று கூறியுள்ளார் சத்யராஜ்.