Categories: இந்தியா

“ஐ லவ் யூ”…. சாக்லேட் கொடுத்து மாணவியிடம் ப்ரொபோஸ் செய்த பேராசிரியர்… விரட்டி விரட்டி வெளுத்தெடுத்த மாணவர்கள்… போர்க்களமான கல்லூரி…!!

Spread the love

பெங்களூரு அருகே நிலமங்கலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில், 50 வயது மதிக்கத்தக்க மைக்ரோபயாலஜி உதவிப் பேராசிரியர் அப்துல் ரெஹ்மான் ஷெரீப் என்பவர், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது 19 வயது மாணவிக்குத் திடீரென “ஐ லவ் யூ” கூறி காதலைத் தெரிவித்துள்ளார். மேலும் சில சாக்லேட்களை மாணவிக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மாணவி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மறுப்பு தெரிவித்தும், அந்தப் பேராசிரியர் விடாமல் “நீதான் என்னைக் காதலிப்பதாக முன்பு கூறினாய், சிசிடிவி காட்சிகளே அதற்குச் சாட்சி” என வாதிட்டுள்ளார்.

பேராசிரியரின் இந்த அநாகரீகச் செயலால் ஆத்திரமடைந்த அந்த மாணவி, வகுப்பறையிலேயே அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேராசிரியர் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, கல்லூரி வளாகத்தில் சக மாணவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பினர். அப்போது ஆவேசமடைந்த மாணவி, தனது காலணியைக் கழற்றி பேராசிரியரைத் தாக்கினார். அங்கிருந்த மற்ற மாணவர்களும் ஒன்று சேர்ந்து அந்தப் பேராசிரியரை விரட்டி விரட்டித் தாக்கியதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட பேராசிரியரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தத் தயாராக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் இதுவரை முறையான புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

4 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

5 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

5 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

5 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago