நான் சும்மா தாங்க அந்த பக்கம் போனேன்…’வாரிசு’ படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல…பிரபல நடிகையின் பேட்டியால் பரபரப்பு….

By Begam

Published on:

பிரபல நடிகை குஷ்பூ தான் வாரிசு திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இளைய தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. மேலும் இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.இவர்களுடன் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் ஒரு  நட்சத்திரபட்டாளமே நடித்து வருகின்றனர்

   

2023ல்  பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படத்தில் நடிகை குஷ்பூ நடித்துள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை குஷ்பூ  விஜய், பிரபு, சரத்குமாருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வைரலானது.

இந்நிலையில், நடிகை குஷ்பூ ‘வாரிசு திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்றும், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்,சரத்குமார் மற்றும் பிரபுவை பார்க்க தான் சென்றேன்.அங்கு அவர்களுடன் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன்’ என்றும் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.

 

author avatar