ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்… திமுக கூட்டணியில் 10 சீட்… திருமாவளவன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தயாராகி வருகிறது. ஆனால் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென ஸ்டாலினிடம் கறார் காட்டி வரும் நிலையில் கூட்டணியில் இருக்கும் மேலும் சில கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பாக குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தேர்தல் அரசியலில் கூட்டணி தொடர்பாக எடுத்த முடிவுகளை சிலர் வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள். திமுகவை நீங்கள் ஏன் உயர்த்திப் பிடிக்கிறீர்கள் என்று சிலர் குறை கூறுகின்றனர். ஆனால் கடந்த ஐந்து ஆண்டு கூட்டணியில் இருந்தாலும் திமுக அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சியை போல் கண்டித்து நடத்திய போராட்டங்களை போல் எந்த கட்சியினரும் நடத்தி இருக்க முடியாது. தேர்தலைப் பற்றி தேர்தலின் போது மட்டுமே சிந்திப்பேன். பதவி எனக்கு பெரிது கிடையாது.

நான் 10 சீட்  கூடுதலாக கேட்டு வாங்குவதால் புரட்சி ஏற்படப் போவதில்லை. தேர்தல் களத்தில் நான் எடுக்கும் முடிவுகள். உங்களுடைய பார்வையில் குறை உள்ளதாக இருக்கலாம். ஆனால் கூட்டணிக்காக மக்களை மறந்து என்னுடைய நலன் குறித்து ஒருபோதும் சிந்தித்தது கிடையாது. பதவி, எம் எல் ஏ சீட் எண்ணிக்கை பெரிதாக நினைத்திருந்தால் எங்கு அதிகமாக கொடுக்கிறார்களோ அந்த இடம் தேடி நான் ஓடி இருப்பேன். எனக்கு பதவி ஆசை மற்றும் பொருள் ஆசை என எதுவும் கிடையாது. பதவி ஆசை இல்லாததே திமுக கூட்டணியில் தொடர காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… காலையிலேயே பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…

9 minutes ago

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

19 minutes ago

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

29 minutes ago

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

39 minutes ago

‘இனி சும்மா விடமாட்டோம்’… சவுதிக்கு ஏமன் ஹவுதிகள் விடுத்த பகீர் வார்னிங்… வான்வெளியில் நடந்த நடுக்கடல் பரபரப்பு…!

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…

49 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் விசித்திரம்.. உயிருடன் பாம்பை விழுங்கும் ஒட்டகங்கள்…! அரபு நாடுகளின் பகீர் பின்னணி…!

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…

59 minutes ago