ஷாம் தமிழ்நாட்டின் மதுரையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். பின்னர் பெங்களூரில் வளர்ந்தார். தனது கல்லூரி படிப்பை முடித்த பின்பு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பத்தில் மாடலிங்கில் இறங்கினார். இவரின் இயற்பெயர் ஷம்சுதீன் இப்ராஹிம் என்பதாகும்.
ஷாம் பெங்களூரில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பல்வேறு விளம்பரங்களுக்கு மாடலிங் செய்தார். மாடலிங் செய்து கொண்டே சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார் ஷாம். 1999 ஆம் ஆண்டு காதலர் தினம் திரைப்படத்தில் ஷாம் நடிப்பதற்காக ஆடிசனுக்கு சென்றார். ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை. 12B படத்திற்கு நடிப்பதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ஷாம்.
தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, அன்பே அன்பே, லேசா லேசா, உள்ளம் கேட்குமே, இயற்கை போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பிற்கான பாராட்டினை பெற்றார் ஷாம். உள்ளம் கேட்குமே படத்தைத் தவிர மற்ற படங்கள் பெரிதாக பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறவில்லை. 2000 களின் நடுப்பகுதியில் பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காத ஷாம் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக முடிவெடுத்தார்.
அதன்படி தில்லாலங்கடி, அகம்புறம், ஒரு மெல்லிய கோடு, பொய் கால் குதிரை போன்ற படங்களில் நடித்த ஷியாம் அடுத்தடுத்து வாய்ப்புகளுக்காக தேடிக் கொண்டிருக்கிறார். ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் ஷாம் விஜயை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால், இவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நடிகர் விஜய் போல ஒரு எளிமையான மனிதரை காண முடியாது. அவரிடம் நான் வியந்து பார்க்கிற ஒரு விஷயம் சைலன்ட்தான். மற்றவர்கள் பேசுவது எல்லாத்தையும் நம்ம கேட்கணும் உள்வாங்கிக்கணும் ஆனா எல்லாத்துக்கும் நம்ம பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல அப்படின்னு விஜய் என்கிட்ட சொல்வாரு என்று விஜய் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் நடிகர் ஷாம்.