#image_title
புகழ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகராகவர் கடலூரில் பிறந்து வளர்ந்தவர். இவரின் முழு பெயர் புகழேந்தி என்பதாகும். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குப் போன நடிகர்களுள் இருவரும் ஒருவர்.
விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது வாழ்க்கையை ஆரம்பித்தார் புகழ். இது மட்டும் இல்லாமல் அது இது எது நிகழ்ச்சியில் தோன்றியிருக்கிறார். இவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து பேரையும் புகழையும் பெற்றார் புகழ். அதன் மூலம் சினிமா வாய்ப்புகளையும் பெற்றார்.
2019 ஆம் ஆண்டு சிக்ஸர் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் புகழ். 2021 ஆம் ஆண்டு அஸ்வின் உடன் என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து வலிமை, யானை, டிஎஸ்பி, அயோத்தி, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்துள்ளார் புகழ்.
அடுதடுத்து பல வாய்ப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார் புகழ். இது தவிர பல மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் ஒரு நேர்காணையில் கலந்து கொண்ட புகழ் பாலாவுடன் ஆன உறவை பற்றி அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால் நானும் பாலாவும் நல்ல நண்பர்கள்தான். நாங்க சண்டை போட்டுட்டோம் அப்படின்னு மக்கள் பேசுறாங்க. நான் தினமும் 50 பேருக்கு சாப்பாடு போடறேன். அதை யாருமே பேசல. பாலா கிட்ட போயி என்ன பத்தி புகழ் ரொம்ப ஆடுறான் தலைக்கனம் ஆயிடுச்சு அப்படி இப்படின்னு அவங்களா யோசிச்சு கதை கட்டுறாங்க. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. நான் பாலா எல்லாரும் நண்பர்களாத்தான் இருக்கோம். பேசிக்கிட்டு தான் இருக்கோம். நான் எப்போதுமே மாறல. ஆரம்பத்துல கார் கழுவுற வேலை பாக்குறப்போ எப்படி இருந்தனோ அதே மாதிரி தான் இப்பவும் இருக்கேன் தேவையில்லாத வதந்திகள் எல்லாம் தயவு செஞ்சு பேசாதீங்க அப்படின்னு ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் புகழ்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…