நித்யா மேனன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இதுவரை 58 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். பெங்களூரில் மலையாளப் பெற்றோருக்கு பிறந்தவர் நித்யாமேனன். 1998ல் நித்யா மேனன் 8 வயதில் ஹனுமான் என்ற பிரெஞ்சு இந்திய ஆங்கில திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார்.
அதற்குப் பிறகு கன்னடத்தில் நாயகியாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் “நூற்றியென்பது” என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதற்கு அடுத்ததாக “வெப்பம்” திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து உறுமி, ஓ காதல் கண்மணி, மெர்சல், ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து காஞ்சனா 2, இருமுகன், சைக்கோ, திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய திரைப்பட விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.
சமீபத்தில் நீ ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நித்யா மேனன் சினிமாவை பற்றி அவர் கூறிய வார்த்தை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அது என்னவென்றால் எனக்கு மிகவும் பிடிக்காத ஒரு ப்ரொபஷன் என்றால் அது சினிமா தான். நான் முதலில் பைலட் ஆகவேண்டும் ஆசைப்பட்டேன். பிறகு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நான் ஊர் சுற்ற வேண்டும், ஃப்ரீயாக இருக்க வேண்டும், ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் விருப்பப்படுகிறேன். தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன். விரைவில் சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன் என்று கூறி இருக்கிறார் நித்யா மேனன்.
கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…
ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…
கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…
தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…