Categories: சினிமா

அம்பானி எல்லாம் சும்மா, 50 களில் இந்திய சினிமாவையே அலறவிட்ட பாடகர் ஏ.எம் ராஜா – ஜிக்கி திருமணம்.. மகள் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்..!

Spread the love

தென்னிந்திய சினிமாவின் மிகச்சிறந்த பாடகர்களாக 50 மற்றும் 60களில் கொடி கட்டி பறந்தவர்கள் தான் டி எம் ராஜா மற்றும் ஜிக்கி தம்பதியினர். முதல்முறையாக வட இந்தியாவில் கால் தடத்தை பதித்த பாடகர் என்ற பெருமையை ஏ.எம் ராஜா பெற்றுள்ளார். இவர்களின் பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாட்டு பாடவா பாடம் சொல்லவா என்ற பாடல் காலம் கடந்தும் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் ஏ.எம் ராஜா மற்றும் ஜிக்கி தம்பதியின் மகள் ஹேமலதா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தாய் தந்தையின் திருமணம் குறித்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், 50 களில் சிறந்த பாடகர்களாக கொடி கட்டி பறந்தவர்கள் தான் என்னுடைய அப்பாவும் அம்மாவும்.

இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் தான். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஒரு கடிதத்தில் எழுதி என் அம்மாவிடம் கொடுக்க அவரோ பாடல் என்று நினைத்து விட்டார். பிறகுதான் அது காதல் கடிதம் என தெரிந்தது. என் அம்மா ஜிக்கி பெரிய குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய சம்பளத்தில் தான் ஒட்டுமொத்த குடும்பமும் நம்பி இருந்தது. பிறகு வீட்டில் சொல்லி முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இன்னைக்கு எல்லோரும் அம்பானி வீடு திருமணத்தை பெருசா நினைக்கிறாங்க. ஆனா அந்த காலத்துலயே அவ்வளவு பிரம்மாண்டமா இவங்க திருமணம் நடந்துச்சு.

 

இவங்க திருமணம் நடந்த தெருவில் நான்கு சாலைகளில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் திருமணத்தில் இருந்த கூட்டத்தில் சிக்கி நடிகர் சிவாஜி தன்னுடைய சட்டையை கிழித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று இன்னொரு சட்டையை அணிந்து கொண்டு வந்தாராம். திருமணத்தில் பூக்கள் அலங்காரம் செய்வதற்கு பதிலாக கொடைக்கானலில் இருந்து பழங்கள் வரவழைக்கப்பட்டு பிரம்மாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட அத்தனை சினிமா நட்சத்திரங்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணம் ஆல்பம் மட்டுமே 5 உள்ளது. அதில் அத்தனை நடிகர்களும் இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகும் அப்படி ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்தனர். அந்த காலத்தில் எந்த ஒரு கார் அறிமுகமானாலும் அப்படியே என் அம்மா வாங்கி விடுவார். அத்தனை விதமான கார்களும் எங்கள் வீட்டில் தான் இருக்கும். ராணி போன்ற ஒரு வாழ்க்கையை தான் அவர் வாழ்ந்தார். எங்களுக்கும் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. ஊரே வியக்கும் வகையில் பிரம்மாண்டமான சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து விட்டு தான் என் தந்தையும் தாயும் மறைந்தனர் என்று ஹேமலதா கூறியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

கிளாமர் உலகிற்கு முழுக்கு… “என் மகன் மட்டும் இல்லைன்னா”… கண்ணீர் விட்ட நடிகை புவனேஸ்வரி… நெஞ்சை உலுக்கும் பேட்டி…!!

தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்', 'பிரியமானவளே' போன்ற பல திரைப்படங்களிலும், 'சித்தி' உள்ளிட்ட புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்…

26 minutes ago

“கண்ணீர் இல்ல.. எல்லாம் நடிப்பா?… துக்கத்துலயும் TRP-யா?… செஃப் தாமு மறைவுக்கு புகழ் போட்ட வீடியோ… புகழை வறுத்தெடுக்கும் கமெண்ட்டுகள்…!!

பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம்…

35 minutes ago

நயன்தாரா vs ஷகிலா… “அவங்க பண்ணா கிளாஸ்… நாங்க பண்ணா தப்பா?”… லாஜிக் கேள்விகளால் மிரள வைத்த ஷகிலா… வெடித்த புதிய சர்ச்சை…!!

1990-களில் சில்க் சுமிதாவின் தங்கையாகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஷகிலா, குறுகிய காலத்திலேயே மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத…

44 minutes ago

சட்டம் அனைவருக்கும் சமமா?… 2 மணி நேரத்தில் பெயிலா?… மகன் செய்த விபத்து… சிக்கிய மாவட்ட நீதிபதி… முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…

54 minutes ago

செம மாஸ்டர் பிளான்… இனிமேல் கேஷ் செல்லாது?… 45 பைசாவால் வந்த வினை… ரயில்வே கவுன்டரில் வந்த புது ரூல்ஸ்… தலையைச் சுற்றும் பயணிகள்…!!

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…

1 மணத்தியாலம் ago

பலே எஸ்கேப்… வலிப்பு வந்ததா?… சினிமா பட பாணியில் ‘நடிப்பு’… ‘ஆபரேஷன் ஜெயில் பிரேக்’… சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்…!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 மணத்தியாலம் ago