கேப்டன் பதவி வேணாம், தோனி டீம் தான் வேணும்… அம்பானிக்கே ‘நோ’ சொன்ன சஞ்சு சாம்சன்?… பின்னணியில் இருக்கும் அதிரடி காரணம்…!!!

By Rajeshwari on பங்குனி 12, 2026

Spread the love

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், அந்த அணியிலிருந்து விலக முடிவு செய்த பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான அம்பானி தரப்பிலிருந்து அவருக்குப் மிகப்பெரிய ஆஃபர் வழங்கப்பட்டதாக அவரது தந்தை விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோரின் கேப்டன்சி கனவுகளுக்கு வழிவிடும் வகையில் சஞ்சு இந்த முடிவை எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் மட்டுமின்றி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளும் அவருக்குக் கேப்டன் பதவியுடன் கூடிய வாய்ப்புகளை வழங்க முன்வந்தன.

   

இருப்பினும், இந்த அணிகளின் போட்டிகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி சஞ்சு சாம்சனைத் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் சிஎஸ்கே இந்த ரேஸில் இல்லாதபோதும், இறுதியில் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்காக விளையாடத் தீர்மானித்துள்ளார்.

   

இந்நிலையில் மற்ற அணிகள் வழங்கிய கேப்டன் பதவியை விட, சிஎஸ்கே அணியில் ஒரு வீரராக இணைந்து விளையாடுவதையே அவர் பெருமையாகக் கருதுகிறார். மார்ச் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சஞ்சு சாம்சன் தனது முன்னாள் அணியான ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து சிஎஸ்கே சீருடையில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.