“அவ ஏன் என்ன பாத்து பேச கூட இல்ல.. காலேஜ்ல அவ என்னோட Best Friend”.. இந்துஜாவின் செயலால் மாயாவிடம் அழுது புலம்பிய பூர்ணிமா..

By Begam

Updated on:

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் தான் பூர்ணிமா. இவர் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் தனது நெருங்கிய தோழி நடிகை இந்துஜா தன்னிடம் சரியாக பேசவில்லை என புலம்பி அழுது இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

   

விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டு 60  நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா உட்பட 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கினர்.

இதுவரை இதில் அனன்யா, பவா செல்லத்துரை , விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷ்யா 10 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இவர்களில் விஜய் வர்மா , அனன்யா இருவரும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து அனல் பறந்து கொண்டு சென்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களின் ஒருவர். இவர் மாயாவுடன் சேர்ந்து கொண்டு இவர் செய்யும் சேட்டைகள் எல்லாம் அளவே இல்லை. இதைத்தொடர்ந்து இரண்டு, மூன்று வாரங்களாகவே பூர்ணிமா செயல் குறித்து கமல் கண்டித்து பேசி இருக்கிறார். இதனால் மனமுடைந்து போயிருந்தார் பூர்ணிமா.

இந்நிலையில் சிறப்பு விருந்தினராக ஹரிஷ் கல்யாண்- இந்துஜா தங்களுடைய ‘பார்க்கிங்’ படத்தின் ப்ரோமோஷன்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இந்துஜா- பூர்ணிமா இருவருமே கல்லூரி தோழிகள். இருவருமே நட்பை தாண்டி ரொம்ப நெருங்கி பழகியும் இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்துஜா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் பூர்ணிமாவை கண்டு கொள்ளவே இல்லை. மற்ற போட்டியாளர்களிடம் சகஜமாக பேசிய அளவு கூட பூர்ணிமாவிடம் பேசவில்லை. இதனால் பூர்ணிமா ரொம்பவே மனசு உடைந்து போய்விட்டார். இது குறித்து விஷ்ணு, மாயாவிடம் பூர்ணிமா புலம்பி இருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar