ஸ்ரீலீலா, 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்து, பெங்களூரில் வளர்க்கப்பட்டு, பெங்களூரில் மகளிர் மருத்துவ நிபுணராக உள்ளார். இவர், 2019 ஆம் ஆண்டு வெளியான “கிஸ்” என்ற கன்னட மொழி திரைப்படத்தில் அறிமுகமானார். “தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில்” சிறந்த பெண் நடிகைக்கான விருதை ஸ்ரீலீலா வென்றார்.
இந்திய சினிமாவில், இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் இவர் நடிப்பை தாண்டி, நடனத்தை தான் ரசிகர்கள் அதிகம் ரசிக்கின்றனர். புஷ்பா 2 திரைப்படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடியதைத் தொடர்ந்து, ஜூனியர் திரைப்படத்தில் வைரல் என்ற பாடலுக்கு கிளாமராக நடனமாடி இருந்தார். தொடர்ந்து கடுமையான விமர்சனத்தை சந்தித்து வரும் இவர், சமீபமாக கொடுத்த பேட்டியில், தனக்கு எப்படிப்பட்ட கதைக்களத்தில் நடிக்க விருப்பம் என்று தெரிவித்திருந்தார்.
பேட்டியில் அவர் கூறியது, இப்பொழுது எனது வயது 20 களில் இருப்பதால், என் வயதுக்கு பொருத்தமான கதைகளிலும், காதல் மற்றும் ராம்காம் (காதல் நகைச்சுவை கலந்த படம்) படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்கள் அதிகரித்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் அத்தகைய படத்தில் நடிக்க விரும்புகிறேன், என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
