“எனக்கும் சம உரிமை உண்டு”… விவாகரத்து வழக்கிற்கு நடுவே சங்கீதா போட்ட புதிய மனு… விஜய்க்கு அடுத்தடுத்த ஷாக்…!!!

By Muthu Mani on பங்குனி 7, 2026

Spread the love

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் குடும்ப வாழ்க்கை தொடர்பான செய்திகள் மீண்டும் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் மீது சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது அவர் தாக்கல் செய்துள்ள புதிய மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருந்த சங்கீதா, இப்போது தனது வசிப்பிட உரிமை தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் சொகுசு பங்களாவில் தன்னை வசிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே சங்கீதாவின் தற்போதைய முக்கியக் கோரிக்கையாக உள்ளது. தான் லண்டனில் குடியேறிவிட்டதால் சென்னையில் தங்குவதற்கு தற்போதைக்கு வீடு இல்லை என்றும், ஆனால் விஜய் தன்னை நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க மறுப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, நீலாங்கரை வீட்டிலோ அல்லது விஜய்யின் அந்தஸ்திற்கு இணையான வேறு ஒரு வீட்டிலோ தான் வசிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

   

இந்த விவகாரத்தால் விஜய்யின் நீலாங்கரை பங்களா மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஸ்ரீ கபாலீஸ்வரர் நகர் பகுதியில் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த வீடு, சுமார் 70 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை மதிப்பிருக்கும் எனத் தெரிகிறது. நவீன வடிவமைப்பு, பசுமையான தோட்டம் மற்றும் அத்துமீறி யாரும் நுழைய முடியாத அளவிலான அதீத பாதுகாப்பு வசதிகள் கொண்ட இந்த பங்களாவில் தனக்கும் சம உரிமை இருப்பதாக சங்கீதா நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறார்.

   

நீலாங்கரை இல்லத்தில் தங்குவதற்கான அனுமதி மற்றும் விவாகரத்து தொடர்பான இந்த வழக்குகளின் விசாரணை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் ஒருபுறம் தனது சினிமா மற்றும் அரசியல் பயணத்தில் தீவிரமாக இருக்கும் நிலையில், மறுபுறம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்துள்ள இந்த சட்டப் போராட்டங்கள் அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகின்றன.