“கர்ப்பம் கலைத்தேன்… ஜிஷ்னுதான் என் உலகம்”…. காதலனுடன் எஸ்கேப் ஆன மனைவி… இன்ஸ்டா மெசேஜால் சிக்கிய கதை… வெளியான அதிர்ச்சி உண்மை….!

By Nanthini on ஐப்பசி 7, 2026

Spread the love

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன் – இலக்கியா தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று, ஒரு மகனும் உள்ளான். இந்தச் சூழலில், மனைவியான இலக்கியா வீட்டிலிருந்த 150 சவரன் நகைகள் மற்றும் குழந்தையுடன் திடீரென மாயமானார். மனைவியைத் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஆதித்தன் வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். எனினும், காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், நகைகளுடன் தலைமறைவான இலக்கியாவைக் கைது செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்குப் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. இலக்கியாவுக்குக் கேரளாவைச் சேர்ந்த ஜிஷ்னு என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்ததும், அவருடனேயே இலக்கியா வீட்டை விட்டுச் சென்றதும் தெரியவந்தது. மேலும், ஜிஷ்னுவின் சகோதரருக்கு இலக்கியா இன்ஸ்டாகிராமில் அனுப்பிய மெசேஜ்களைப் போலீசார் கைப்பற்றினர். அதில், தானும் ஜிஷ்னுவும் பல இடங்களுக்குச் சென்று அடிக்கடி தனிமையில் சந்தித்ததாகவும், அதனால் ஏற்பட்ட கர்ப்பத்தை 6 மாதங்களில் கலைத்ததாகவும் இலக்கியா விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

   

கணவரை ஏமாற்றி, பலகோடி மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற குற்றத்திற்காக இலக்கியாவை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து பாதியளவு நகைகள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய நகைகள் எங்கே இருக்கிறது என்பது குறித்துக் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.