உலகிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோ நிறுவனம்.. பல கோடி பிசினஸ்.. மறைந்த ராமோஜி ராவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு..!

By Mahalakshmi on ஜூன் 8, 2024

Spread the love

ராமோஜி ராவ் ஸ்டூடியோ நிறுவனத்தின் நிறுவனர் ராமோஜிராவ் இன்று காலை காலமானார். இந்தத் தகவல் திரையுலகினரிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊடக தொழில் அதிபரும் ராமோஜி ராவ் ஸ்டூடியோ நிறுவனத்தின் உரிமையாளர் ராமாராவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 84 இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள் .இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு குறித்து தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

   

   

ராமோஜி ராவ் என்பது இவரது பெயர், 1936 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தனது குழந்தை பருவத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டி வந்த இவர் பிற்காலத்தில் தொழிலதிபராகவும் ஊடகத் தொழில் அதிபராகவும் மாறினார். இவர் ராமா தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த தம்பதிக்கு சுமன் பிரபாகர் மற்றும் கிரன் பிரபாகர் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 1996 ஆம் ஆண்டு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி என்ற ஸ்டூடியோ ஒன்றை தொடங்கினார். இதுதான் உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ ஆகும். ராமோஜி ராவ் பெண்ணுரிமை சமத்துவத்திற்கான நீதி பல மனித நலத்திட்டங்களை சித்தரிக்கும் வகையில் பல திரைப்படங்களை கொடுத்தவர்.

திரைப்படங்களுக்கான வசனங்களை தேர்ந்தெடுத்து பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் ராமோஜி ராவுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது. பிலிம் சிட்டி தவிர ராமோஜி ராவ் மற்ற நிறுவனங்களையும் சொந்தமாக வைத்திருக்கின்றார். தனது ஆசாத்திய முயற்சி காரணமாக 1995இல் இடிவி நெட்வொர்க் சேனலின் கீழ் 12 சேனல்களைக் கொண்ட குழுவை தொடங்கி பல்வேறு மொழிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்.

இந்த சேனல் மூலமாக தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, கன்னடம், ஒரியா, குஜராத்தி மற்றும் உருது ஆகிய மொழிகளில் நாட்டின் பிற மாநிலங்களின் பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையிலும் நிகழ்ச்சிகள் இந்த சேனலில் ஒளிபரப்பானது, 1980 ஆம் ஆண்டு ஊறுகாய், மசாலா பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கும் ஃபுட்ஸ் நிறுவனத்தையும் தொடங்கினர்.

இவர் 2002ல் தனது மனைவி ராமா தேவி பெயரில் ராமா தேவி பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளி ஒன்றை நிறுவினார். பல தடைகள் வந்த போதிலும் துணிச்சலுடன் நின்று சக்தி வாய்ந்த தொழிலதிபராக திகழ்ந்த இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஊடகத் தொழிலதிபர் என பன்முகத்தன்மையாக விளங்கினார். இவரது சொத்து மதிப்பு 41,706 கோடி ஆகும். இவர் இந்த உலகை விட்டுப் பிரிந்தாலும் அவரது புகழ் இந்த உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.