அன்னமய்யா மாவட்டம், பெத்ததிப்பசமுத்திரம் மண்டலம், ராபூரிவாரிபல்லி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொத்தபல்லி கிராமத்தைச் சேர்ந்த இறைச்சி வியாபாரியான சுரேஷ் என்பவருடன் பத்மாவதி என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அரசு வழங்கி வரும் ‘தல்லிகி வந்தனம்’ திட்டத்தின் உதவித் தொகையைத் தனக்குத் தருமாறு சுரேஷ் தன் மனைவி பத்மாவதியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், பத்மாவதி அந்தப் பணத்தைத் தர மறுத்ததால் தம்பதியிடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் தொழில் சார்ந்த பணிகளுக்குப் பயன்படுத்தும் கத்தியால் மனைவி பத்மாவதியின் கழுத்தை அறுத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/greatandhranews/status/2080558465714630992/video/1
தனது மகளின் மறைவால் பேரதிர்ச்சியடைந்துள்ள தாய் கலாவதி, ‘தல்லிகி வந்தனம்’ திட்டப் பணத்தைக் கொடுக்காத ஒரே காரணத்திற்காகவே தனது மருமகன் சுரேஷ், மகள் பத்மாவதியை இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்துவிட்டதாகக் கூறி கண்ணீர் மல்கக் கதறி அழுதார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
