உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் சோனு என்பவரைக் கொன்று இரும்புப் பெட்டிக்குள் அடைத்து நெடுஞ்சாலையோரம் வீசிய வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கொலை வழக்கில் சோனுவின் மனைவி நேஹா ராவத், பக்கத்து வீட்டுக்காரரான ஜிதேந்திரா என்ற ராகுல் மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் காவல்துறையினரால் வெறும் 12 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சல்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சோனு, உன்னாவ் – ராய் பரேலி நெடுஞ்சாலையோரம் பெட்டிக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் என்.பி.ஆர் கேமராக்களை ஆய்வு செய்தபோது, சடலத்தை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோவின் பதிவெண் மூலம் துப்பு துலங்கியது. ரூ.1,200 கொடுத்து நேஹாவால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட இந்த லோடு ஆட்டோ மூலமே பெட்டி நெடுஞ்சாலையோரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, சோனு தன்னைத் தொடர்ந்து மது அருந்திவிட்டுத் துன்புறுத்தியதாகவும், பல பெண்களுடன் தொடர்ப்பு வைத்து கொண்டு அடிக்கடி சண்டையிட்டதாகவும் மனைவி நேஹா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று சோனு மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் கீழே விழுந்து காயமடைந்ததாகவும், அதன் பின் அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், கைது செய்யப்பட்டுள்ள ராகுல், தான் நேஹாவின் தூண்டுதலின் பேரில் லோடு ஆட்டோவையும் ஆட்களையும் மட்டுமே ஏற்பாடு செய்ததாகவும், கொலைக்கும் தனக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றும் மறுத்துள்ளார். எனினும், ஐந்து தனிப்படை போலீசார் இவ்வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…