“பாலியல் மனநோயாளி…” 3 மாதத்தில் முடிந்த காதல் திருமணம்…! தோழிகளிடம் கதறி அழுத பெண் கொடூரமாக கொலை…. நாடகமாடிய கணவர் சிக்கியது எப்படி…? பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 2, 2026

Spread the love

தென் கொரியாவின் சியோல் நகரில், காதலித்துத் திருமணம் செய்து கொண்ட 35 வயதான யூ ஹே-யங் என்ற பெண், திருமணமாகி 3 மாதங்களிலேயே தனது வீட்டில் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாதது போல் மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு கணவன் சியோ நாடகமாடிய போதிலும், பிரேதப் பரிசோதனையில் பெண் மூச்சுத்திணறிப் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கணவனே இந்தக் கொடூரத்தைச் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

உடல்நலக் குறைவு மற்றும் மாதவிடாய் காலத்தில் கணவன் கொடுத்த பாலியல் அழுத்தத்திற்கு இணங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த சியோ மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். முன்னதாகக் கணவனின் தொடர் வற்புறுத்தலால் யூவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், காயங்கள் ஆறும் முன்பே வற்புறுத்தியதால் கணவனை “பாலியல் மனநோயாளி” என்று கூறி விவாகரத்து செய்ய யூ திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை மற்றும் அண்டை வீட்டாரின் சாட்சியங்களின் அடிப்படையில், காவல் துறையினர் இறுதிச் சடங்கு நடந்த இடத்திலேயே சியோவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.