“ரூமில் அலறிய பிள்ளைகள்…” ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…. கணவரின் வெறிச்செயல்…. கதறி அழுத குடும்பத்தினர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் ஸ்வார் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் தனது மனைவியின் தலையில் கனமான பொருளால் பலமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். கொலையைச் செய்த பின்னர், தனது குழந்தைகளை அந்த அறைக்குள்ளேயே பூட்டிவிட்டு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

குழந்தைகள் கத்தி கூச்சலிட்டதை அடுத்து விஷயமறிந்த அக்கம் பக்கத்தினரும் போலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாக ஸ்வார் காவல் நிலையப் போலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த பெண்ணின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய கணவனைத் தீவிரமாகத் தேடி வரும் போலிஸார், இக்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.