திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

By Swetha on கார்த்திகை 6, 2026

Spread the love

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு விவேக் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்று அதிகாலை தம்பதியரிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த விவேக் சமையலறைக் கத்தியால் முத்து பிரியாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

கொலைக்குப் பிறகு தங்களது குழந்தையைச் செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் உள்ள தனது அண்ணனிடம் சென்று பத்திரமாக ஒப்படைத்த விவேக், நேராக நீலாங்கரை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். போலீசார் அவரது மனைவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.