ஆந்திர மாநிலம் கம்மம் நகரில் கள்ள உறவு சந்தேகத்தால் கணவன் தன் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற பயங்கர சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வித்யா சாகர் என்ற நபர் தனது மனைவி ரேணுகா மீது கொண்ட சந்தேகத்தின் காரணமாக இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.
தம்பதியினர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. ரகுநாதபாலம் பகுதி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஆத்திரமடைந்த வித்யா சாகர் காரின் உள்ளேயே மனைவியின் கழுத்தை நெரித்து ரேணுகாவைப் படுகொலை செய்துள்ளார்.
மனைவியைக் கொன்ற பிறகு வித்யா சாகர் தனது உறவினர்களைத் தொடர்புகொண்டு, தான் இறந்துகொண்டிருப்பதாகக் கூறி நாடகமாடியுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த ரகுநாதபாலம் போலீசார், பிரகதி பள்ளி அருகே காரை நிறுத்தி வைத்திருந்த வித்யா சாகரைக் கைது செய்தனர். இச்சம்பவத்தால் இவர்களின் குழந்தைகள் தற்போது அனாதையாகி நிற்கும் சோகம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்ற ஓட்டுநர், மதுபோதையில் உறவினரின் ஹோட்டலுக்குச் சென்றபோது கொதிக்கும் வெந்நீர் அண்டாவில்…
அசாம் மாநிலம் கவுகாதியைச் சேர்ந்த 30 வயதான ராமானுஜ் கோஸ்வாமி என்பவர், தனது மனைவி ரியா தாலுக்தாரை (25) கொடூரமாகக்…
தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…