“அந்த மாத்திரையை சாப்பிட்டு செத்துப்போ” சித்ரவதை செய்த மனைவி… “அம்மா, அப்பா என்னை மன்னிச்சிடுங்க”… உருக்கமான கடிதம் எழுதிவிட்டு தந்தை தற்கொலை…!!

By Soundarya on மாசி 7, 2026

Spread the love

பீகார் மாநிலம் மோதிஹாரியைச் சேர்ந்த சௌரப் மிஸ்ரா, மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 2022-ல் திருமணம் நடந்த சில காலத்திலேயே தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. தொடர்ச்சியான நீதிமன்ற விசாரணைகள், கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் குடும்பச் சூழல் சௌரப்பை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிய நிலையில், அவரது மனைவியின் தரப்பிலிருந்து வந்த கடுமையான வசவுச் சொற்கள் அவரை மேலும் நிலைகுலையச் செய்துள்ளன.

குறிப்பாக, “நீ ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்? போய் செத்துப்போ” மற்றும் “சல்பாஸ் மாத்திரைகளைச் சாப்பிட்டு உயிரிழந்துவிடு” போன்ற கொடூரமான வார்த்தைகள் சௌரப்பை ஆழமாகப் பாதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர்ச்சியான மன ரீதியான சித்திரவதையைத் தாங்க முடியாமல், அவர் விபரீத முடிவை நோக்கித் தள்ளப்பட்டார். மனைவியின் தூண்டுதல் வார்த்தைகளே அவரது மரணத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

   
தனது இறுதி முடிவை எடுப்பதற்கு முன், சௌரப் தனது பெற்றோரிடம் மன்னிப்பு கோரியும், தனது மகளின் மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தியும் உருக்கமான செய்தியை எழுதியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் சௌரப்பின் மரணம் மற்றும் அவரது மனைவிக்கு இதில் உள்ள தொடர்பு குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.