கரூர் மாவட்டம் கொசூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(35). இவரது மனைவி ராஜகுமாரி(25). இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். நாகராஜ் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை நாகராஜ் சம்பள பணத்தை வாங்கி மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். உடனே ராஜகுமாரி ஏன் இப்படி கொடுத்து வந்து உடம்பை கெடுத்துக்கொள்கிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த நாகராஜ் மதுபோதையில் கட்டையால் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் உறவினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜகுமாரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் நாகராஜை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…