“கடன் தொல்லையால் வீட்டை விட்டு ஓடிய கணவன்”… நடுரோட்டில் வைத்து நபர் செய்த அசிங்கம்… 9 வயது மகனுக்கு விஷம் கொடுத்து தாய் எடுத்த விபரீத முடிவு…!

Spread the love

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை மாதா கோவில் தெருவில் ராமலட்சுமி என்பவர் வசித்து வரும் நிலையில் இவருடைய மகள் உமா (31). இவருக்கும் சுந்தரபாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் ஒருவர் உள்ளார். இதனிடையே கோவிந்தராஜ் பாட்டா குறிச்சி கிராமம் பாடசாலை தெருவை சேர்ந்த முத்தையா என்பவருடைய மகான் மகேந்திரன் என்பவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனுக்காக உமாவின் தாயார் பெயரில் உள்ள வீட்டை கடந்த 2020 ஆம் ஆண்டு மகேந்திரன் கிரையம் பெற்றதாக தெரிகிறது.

இந்த சூழலில் கடன் தொல்லையால் கோவிந்தராஜ் தலைமறைவாகி எங்கோ சென்றுவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை தெரியாத நிலையில் கடன் தொகை 5 லட்சத்திற்கு பதிலாக 2022 ஆம் ஆண்டு ஆறு லட்சம் தருவதாக உமா தரப்பில் கூறியும் வீட்டை தர மறுத்த மகேந்திரன் கடந்த மாதம் 8.50 லட்சம் தந்தால் தான் வீட்டை திருப்பித் தருவதாக ஊர் பெரியவர்களை வைத்து பேசி ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பணத்தையும் பெற்றுள்ளார்.

இப்படியான நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு உமா வீட்டுக்கு சென்ற மகேந்திரன் தனக்கு அந்த தொகை போதாது எனக் கூறியதுடன் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வீடு பிரச்சனை தொடர்பாக நீதிமன்றம் மூலம் தீர்வு காணும் படி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு சுரண்டையில் தான் வேலை பார்த்து வரும் நர்சிங் ஹோமிற்கு சென்றுவிட்ட உமா வந்தபோது உமாவை பொது இடத்தில் வைத்து தனது கூட்டாளிகளுடன் சென்ற மகேந்திரன் வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டியதாக தனது தாயிடம் உமா மன வேதனையுடன் கூறியுள்ளார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த உமா நேற்று தன்னுடைய மகனுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்ததுடன் அவரும் அதனை குடித்துள்ளார். மயங்கி கிடந்த தாய் மற்றும் மகன் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் உமா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். சிறுவனுக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உமாவின் தாயார் அளித்த புகாரி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

1 மணத்தியாலம் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago