“அடிக்கடி ஓடிப்போறா… அதான் இப்படி பண்ணுனேன்” கணவன் செய்த செயலால் கதறிய மனைவி… அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்..!!

By Swetha on வைகாசி 21, 2026

Spread the love

பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் உள்ள பச்சகர்வா கிராமத்தில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கணவன் தனது மனைவியை கயிற்றால் ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அவசர உதவி எண் (Dial 112) போலீசார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பெண்ணை மீட்டனர். மனைவியை ஏன் கம்பத்தில் கட்டி வைத்தீர்கள் என்று போலீசார் கணவனிடம் கேட்டபோது, “என் மனைவி அடிக்கடி வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள், அதனால்தான் அவளைக் கட்டி வைத்தேன்” என்றும், அவர்கள் இருவருக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

   

மறுபுறம், பாதிக்கப்பட்ட சோபா தேவி என்ற பெண் கூறுகையில், தனது கணவர் தன்னிடம் பேசுவதில்லை என்றும், தான் சமைக்கும் உணவை அவர் சாப்பிடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், சம்பவத்தன்று கணவர் தன்னை அடித்ததால் கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது, அவர் தன்னை கம்பத்தில் கட்டி வைத்ததாகக் கூறி தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.