கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே கள்ளியூரை சேர்ந்தவர் சுனில் (42) தொழிலாளி, மனைவி பின்சி (36) பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக துணை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது இருந்தும் இவர்களுக்கு குழந்தை இல்லை. சுனிலுக்கு மதுப்பழக்கம் உள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்சி அடிக்கடி இரவுகளில் போன் பேசி வந்துள்ளார். சுனில் கண்டித்தும் பின்சி கேட்கவில்லை. இதனால் இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். அடுத்த நாள் பின்சி வேலைக்கு போகவில்லை. லீவ் சொல்லாமலே விடுமுறை எடுத்ததால் கூடப் பணி செய்பவர் பின்சிக்கு ஏதோ உடல்நிலை சரியில்லையோ வீட்டிற்கு போய் பார்த்து வரலாம் என்று நினைத்து வந்தவர்க்கு பேரதிர்ச்சி.
பின்சி அருவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார் இதை கண்டு அதிர்ந்து போனவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பின்சியின் உடலை உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் .இதைத் தொடர்ந்து பின்சியின் கணவனிடம் விசாரித்த போது தான் தெரியவந்தது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்று விட்டான் என்று. கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
